ஆதி திரைக்களம்

ஆதி திரைக்களம் ”கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே” என்கிற கோட்பாட்டை முன் வைத்து திரைப்பட இயக்குனர் மு.களஞ்சியம் அவர்கள் தொடங்கி இருக்கிற திரைப்பட நிறுவனம் ஆகும்.

ஆதி திரைக்களம் முற்போக்கான படைப்புகளை மட்டுமே படைக்கும் நோக்கம் கொண்டதாகும்.அதன் அடிப்படையிலே,தனது முதல் படைப்பாக, ”முந்திரிக்காடு” திரைப்படத்தை சாதியத்திற்கு எதிரான திரைப்படமாக தயாரித்து வருகிறது.

எதிர் காலத்தில் உலகத்தரம் வாய்ந்த குழந்தைகள்,திருங்கைகள்,பெண்கள் குறித்த விழிப்புணர்வு திரைப்படங்களையும்,குறும்படங்களையும் சமூக அவலங்களை முன்னிறுத்துகிற ஆவணப்படங்களையும் தயாரிக்கும்.

அதே போல மக்கள் போராட்டங்களையும்,மக்கள் போராளிகளையும் பொது தளத்தில் எடுத்துச்செல்லும்.

இளைய தலைமுறை படைப்பாளிகளையும்,கலைஞர்கலையும் உருவாக்குவதில் பெரும் பங்காற்றும்.

ஆதி திரைக்களம் சார்பில் திரைப்படம் குறித்த எளிய மக்கள் வாசித்து புரிந்து கொள்ளும் படியான ஒரு பத்திரிக்கை நடத்துவது இதன் குறிக்கோள்களில் ஒன்றாக இருக்கிறது.